
ஆசிய ஹாக்கி கோப்பை நாளை தொடங்க இருக்கின்றது. நமது தேசிய விளையாட்டான ஹாக்கி முன்பு சிறந்த வீரர்களுடன் நல்ல அணியாக திகழ்ந்தது. ஆனால் இடையில் நமது இந்திய அணி சிறப்பாக செயல்படவில்லை.
பிறகு இந்திய ஹாக்கி அணியின் அமைப்பு பெரும் முயற்சி செய்து மீண்டும் சிறந்த அணியாக இந்திய ஹாக்கி அணியை நிலைநாட்டி உள்ளது. இதனை தொடர்ந்தே இந்திய ஹாக்கி அணி இப்போது உலக தரவரிசையில் 5ம் இடத்தில் உள்ளது.
நாளை ஓமன் நகரில் தொடங்க உள்ள இப்போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியாவும் ஓமனும் மோத உள்ளது. இதனை குறித்து இந்திய ஹாக்கி அணி கேப்டன் சிறப்பான ஆட்டத்தின் மூலம் இப்போட்டியை வென்று கோப்பையை கைப்பற்றுவோம் என கூறியுள்ளார்.