சிவகார்த்திகேயன் நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் வெளியாகி இருந்த சீமராஜா படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் நல்லபடியாகவே அமைந்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் உள்ள பிரபல தியேட்டர்களில் ஒன்றான ரோகினி தியேட்டர் உரிமையாளர் இதுவரை வெளியான சிவகார்த்திகேயன் படங்களிலேயே சீமராஜா தான் மிக குறைந்த ஒபனிங் வசூல் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இதற்கான காரணம் சீமாராஜா படத்தின் முதல் ஷோ காட்சிகள் ரத்தானதும் முக்கியமான ஒன்று என கூறியுள்ளார். விநியோகிஸ்தகர்கள் இடையேயான பிரச்சனையால் 5 மணி காட்சிகள் ரத்து செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.