Zombie Movie Review : Click Here to Read Full Review | Yogi Babu | Yashika Anand | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema News
புவன் நுல்லன் இயக்கத்தில் யோகி பாபு, யாஷிகா ஆனந்த், யூ ட்யூப் பிரபலங்களான அன்பு தாசன், கோபி, சுதாகர் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜாம்பி.

Zombie Movie Review :

படத்தின் கதைக்களம் :

சுதாகர், கோபி அரவிந், அன்பு தாசன் என மூவரும் தங்களுக்கு ஏற்பட்ட மனஉளைச்சல்களால் பாருக்கு சரக்கு அடிக்க செல்கின்றனர். அதன் பின்னர் அங்கு இவர்களுக்கு பிஜிலி ரமேஷ் மற்றும் டி. எம் கார்த்தியின் அறிமுகம் கிடைத்து அதன் பின்னர் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு ரிசார்ட்டுக்கு ஒரே காரில் செல்கின்றனர்.

டான் யோகிபாபுவின் போனை பாரில் பிஜிலி ரமேஷ் ஆட்டைய போட்டு விட அவரும் ரிசார்ட்டை நோக்கி செல்கிறார்.

அதே ரெஸெர்ட்டில் தான் மருத்துவ கல்லூரி மாணவியான யாஷிகா தன்னுடைய தோழிகளுடன் தங்கியுள்ளார். அங்கு இவர்களில் சிலரை ஜாம்பி தாக்கி விட அவர்களிடம் இருந்து இந்த கும்பல் தப்பிக்கிறதா? இல்லையா? என்பது தான் மீதி கதை.

நீ அடங்கவே மாட்டியாமா.. படு ஹாட்டான கவர்ச்சியில் யாஷிகா ஆனந்த் – வைரலாகும் சர்ச்சை புகைப்படம்!

படத்தை பற்றிய அலசல் :

நடிப்பு :

பேருக்கு தான் படத்தில் இவ்வளவு காமெடி நடிகர்கள் உள்ளார்களே தவிர படத்தில் காமெடி இல்லை. மருத்துவ கலோரி மாணவி என்ற பாத்திரம் கொடுத்து விட்டு யாஷிகாவை வெறும் கவர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தி உள்ளார்கள்.

தொழில் நுட்பம் :

இசை :

பிரேம் ஜி -யின் இசை மட்டும் ஓரளவிற்கு ரசிக்கும் படியாக அமைந்துள்ளது. பாடல்களில் ஈர்ப்பு இல்லை.

ஒளிப்பதிவு :

விஷுஸ்ரீயின் ஒளிப்பதிவு ஓகே.

எடிட்டிங் :

தினேஷ் பொன்ராஜ் எடுத்த மொத்த காட்சிகளை அப்படியே ஒன்றாக சேர்த்து கொடுத்து விட்டார் போல. எந்தவொரு காட்சியையும் நீக்கியது போல தெரியவில்லை.

இயக்கம் :

புவன் நுல்லன் ஜாம்பி படம் என்றால் திகில் இருக்க வேண்டும் என்பதை மறந்து இந்த படத்தை காமெடி படமாக கொண்டு செல்ல முடிவு செய்துள்ளார். ஆனால் அதையும் முழுமையாக செய்து முடிக்கவில்லை.

இவ்வளவு காமெடி நடிகர்கள் இருந்தும் படத்தில் காமெடியை கொடுக்க மறந்து விட்டார் போல, யோகி பாபுவை கூட சரியாக பயன்படுத்தவில்லை.

தம்ப்ஸ் அப் :

1. படத்தின் இசை

தம்ப்ஸ் டவுன் :

1. காமெடி படத்தில் காமெடியை காணவில்லை
2. கதையை சரியாக கொண்டு செல்லவில்லை
3. யாஷிகா கவர்ச்சி பொம்பையாக வந்து சென்று விடுகிறார்.

REVIEW OVERVIEW
ஜாம்பி விமர்சனம்
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
zombie-movie-review-2மொத்தத்தில் ஜாம்பி ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான்.