Zee Tamil gets Oviya film : satellite rights, Rajinikanth, Thalapathy Vijay, Kalavani 2, Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News

இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை பிரபல ஜீ நிறுவனம் கைப்பற்றியிருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

Zee Tamil gets Oviya film :

தமிழ் சினிமாவில் 2010-ம் ஆண்டு வெளிவந்த படம் களவாணி. அமைதியாக வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை ருசித்த இப்படத்தின் இரண்டாம் பாகம் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தயாராகி வருகிறது.

முதல் பாகத்தை இயக்கிய சற்குணமே இயக்க விமல், ஓவியா ஆகியோர் இதிலும் கதை மாந்தர்களாக நடிக்கிறார்கள்.

இதற்கிடையில் நடிகை ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்திருப்பதால் இப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

பிகில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இதெல்லாம் கவனித்தீர்களா? இவ்வளவு டீட்டைலா?

இப்படம் ஜுன் 28-ம் தேதி வெளியாக தயாராகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை பிரபல ஜீ நிறுவனம் கைப்பற்றியிருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே நிறுவனம்தான் மெர்சல், 2.0 படங்களின் உரிமையையும் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக வெளியான 90 எம்.எல் படம் வணிக ரீதியாக தோல்வியுற்ற நிலையில் இந்த படமாவது ஓவியாவிற்கு வெள்ளித்திரையில் வெற்றியை தேடி தருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.