ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல் ஆன ‘அன்பே சிவம்’ என்னும் மெகா தொடரை விரைவில் முடிவுக்கு  கொண்டு வந்துள்ளனர். இந்த தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மக்களின் கவனத்தை அதிகம் கவர்ந்துள்ள விஷயம் என்றால் அது சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்தான். அதில் பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் “அன்பேசிவம்”என்னும் இந்தத் தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது.

பிரபல சீரியலை விரைவில் முடிவுக்கு கொண்டு வந்துள்ளது ஜீ தமிழ் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.

கடந்த வருட இறுதியில் தான் இந்த “அன்பே” சிவம் சீரியல் தொடங்கப்பட்டது. விவாகரத்து ஆன ஹீரோயின், அவரை போலவே விவாகரத்து ஆன ஹீரோ.. இருவருக்கும் நடுவில் மலரும் காதல்.. இதுதான் இந்த நாடகத்தின் கதைக்களம். இந்த வித்தியாசமான தொடரை பலரும் ரசித்து பார்த்து வருகின்றனர்.

பிரபல சீரியலை விரைவில் முடிவுக்கு கொண்டு வந்துள்ளது ஜீ தமிழ் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.

ஆனால் தற்போது ஜீ தமிழில் புதிதாக இரண்டு சீரியல்கள் வர இருக்கிறது. இந்த சீரியல்களை  ப்ரைம் டைமில் தான் கொண்டு வர இருக்கிறார்கள். இந்நிலையில் இந்த இரண்டு சீரியலுக்கான நேரத்தை ஒதுக்கு வதற்காக இந்த ‘அன்பேசிவம்’ தொடரை விரைவில் முடிக்க போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த தகவலை அறிந்த இத்தொடரின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.