Yuvan Shankar Raja Wife

வீட்டில் 70 கிலோ போதைப்பொருள் எச்சரிக்கை எங்கே போனாலும் எடுத்துட்டு தான் போவேன் என யுவன் சங்கர் ராஜா மனைவி கூறியது ஷாக்கிங்கை ஏற்படுத்தியுள்ளது.

Yuvan Shankar Raja Wife Interview : தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் யுவன் சங்கர் ராஜா. இவருடைய மனைவி பெயர் ஜாப்ஃரூன் நிஷா. இவர் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் யுவன் சங்கர் ராஜா இஸ்லாம் மதத்திற்கு மாறி இவரை திருமணம் செய்து கொண்டார்.

ஜாப்ஃரூன் நிஷா முதல்முறையாக யூ ஒன் ரெக்கார்ட்ஸ் என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ளார். இந்தப் பேட்டியில் யுவன் சங்கர் ராஜா எப்போதும் அமைதியாக இருப்பார். என்ன சாமியார் மாதிரியே இருக்கீங்க எனக் கேட்பேன்.

அதே சமயம் அவர் அவருக்கு நெருக்கமானவர்கள் அழும் அளவிற்கு கலாய்த்து எடுத்து விடுவார். யுவன் சங்கர் ராஜாவின் இந்த பக்கத்தை பெரும்பாலும் யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். எங்களது குழந்தைக்கு மாமனாரும் தமிழ் சொல்லிக் கொடுப்பார். நானும் இவனும் மாறிமாறிக் பட்டிக்காட்டு தமிழ் என நாங்கள் பேசும் தமிழை கூறி கொள்வோம்.

வீட்டில் 70 கிலோ டிரக்ஸ் வெச்சிருக்கேன். எங்க போனாலும் எடுத்துட்டு தான் போவேன் என கூறியுள்ளார். போதைப்பொருள் என சொன்னதும் அதிர்ச்சியடைய வேண்டாம். போதைப் பொருள் என தன்னுடைய கணவர் யுவன் சங்கர் ராஜாவை தான் கூறியுள்ளார்.