Yuvan Shankar Raja

Vishal Yuvan Combo : விஷால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் இரும்புத்திரை.

இணையத்திற்கு பின்னால் இருக்கும் சதி வேலைகளை வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டுவந்த இப்படம் வசூலில் பட்டையை கிளப்பியது.

மீண்டும் இணையும் அதிரடி கூட்டணி – இப்பவும் ஹிட் கிடைக்குமா?

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறதாம். ஆனால் முதல் பாகத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரனுக்கு பதிலாக அறிமுக இயக்குனர் ஆனந்த் இப்படத்தை இயக்குகிறாராம்.

தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவலின்படி இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறாராம். சண்டக்கோழி முதல் பாகத்தில் முதல்முறையாக இணைந்த விஷால் – யுவன் கூட்டணிக்கு இது பத்தாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்சமயம் சுந்தர் சி படத்துக்காக துருக்கியில் இருக்கும் விஷால் அதன் படப்பிடிப்பு முடிந்ததும் இப்படத்தில் கவனம் செலுத்தவுள்ளாராம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.