Yuvan Shankar Raja
வலிமை பாட்டு எப்படி இருக்கும் என யுவன் ஷங்கர் ராஜா ஹீரோ ட்ரைலர் வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் யுவன் ஷங்கர் ராஜா. தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்து வரும் இவர் ஹீரோ படத்திற்கு இசையமைத்துள்ளார்.

எச். வினோத் இயக்கத்தில் உருவாக உள்ள வலிமை படத்திற்கு இசையமைக்க உள்ளார். இந்நிலையில் இன்று நடந்த ஹீரோ ட்ரைலர் வெளியீட்டு விழாவில் வலிமை பாடல்கள் பற்றி பேசியுள்ளார்.

வலிமை படத்தின் பாடல்கள் சரியில்லை என்றால் என்னை கேளுங்க, நிச்சயம் பாட்டு பக்காவா இருக்கும் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.