யுவன் சங்கர் ராஜா ஹிந்தி தெரியாது போடா என்று டீசர்ட் அணிந்து வெளியிட்ட புகைப்படத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.

Yuvan Shankar Raja T-shirt Issue : தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் யுவன் சங்கர் ராஜா. இவர் தற்போது வலியை உட்பட பல்வேறு திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

சமீபத்தில் இவன் சங்கர் ராஜா ஹிந்தி தெரியாது போடா என்ற டீசர்ட் அணிந்து வெளியிட்டிருந்த புகைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.யுவன் சங்கர் ராஜாவைத் தொடர்ந்து பலர் இதுபோன்று புகைப் படங்களை வெளியிடத் தொடங்கினர்.

கொரோனாவுக்கு எதிராக ரோபோ சங்கர் செய்த வேலையை பாருங்க!!

இதன் காரணமாக யுவன் சங்கர் ராஜாவுக்கு பாஜக தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.

சமூக வலைதளப் பக்கங்களில் மும்மொழிக் கொள்கை வேண்டாம் எனச் சொல்லும் நீங்கள் மூன்று பொண்டாட்டி வேண்டாமே என சொல்ல முடியுமா என கேள்வி கேட்கின்றனர். அதாவது யுவன் சங்கர் ராஜா மூன்று திருமணம் செய்ததை பற்றி விமர்சனம் செய்கின்றனர்.

அதேபோல் இந்தி படம் ஒன்றுக்கு இசையமைக்கும் நீங்கள் இந்தி தெரியாது போடா என கூறுவது வேடிக்கையாக உள்ளது என கூறி வருகின்றனர்.