Yuvan Says Ready to Join With Vijay
Yuvan Says Ready to Join With Vijay

விஜய்யுடன் இணைவது எப்போது? வலிமை என்னாச்சு என்பது குறித்த கேள்விகளுக்கு யுவன் சங்கர் ராஜா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.

Yuvan Says Ready to Join With Vijay : தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் யுவன் சங்கர் ராஜா. மெலடி கிங் என பெயரெடுத்த இவரின் இசை க்கு லட்சக்கணக்கான மக்கள் அடிமையாகி உள்ளனர்.

தற்போது இவர் தல அஜித்தின் வலிமை மட்டுமல்லாமல் மேலும் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார். அப்போது ஒருவர் வலிமை என்னாச்சு என கேட்க வலிமை படத்தின் பின்னணி இசை பயங்கரமாக இருக்கும். தற்போது லாக் டவுன் காரணமாக வேலைகள் தடைப்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.

மேலும் இவர் நம்பர் தல என இந்த பதிவில் கூறியதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

என்னை பற்றிய வதந்திகளுக்கு நான் கொடுக்கும் ரியாக்ஷன் இது தான் – பிரியா பவானி சங்கர் வெளியிட்ட புகைப்படம்!

அதன் பின்னர் இன்னொரு ரசிகர் விஜயுடன் எப்போது பணியாற்றுவீர்கள் என கேட்டுள்ளார். இதற்கு யுவன் சங்கர் ராஜா அவருடன் பணியாற்ற நான் தயாராக உள்ளேன் வாய்ப்பு வந்தால் உடனே செய்து விடலாம் என கூறியுள்ளார்.

மேலும் இதை தனக்கு பல நேரங்களில் ஊக்கம் அளித்ததாகவும் கூறி உள்ளார். இவர்கள் இருவரும் புதிய கீதை படத்தில் இணைந்து பணியாற்றினர். அதன் பின்னர் மீண்டும் இந்த கூட்டணி அமையவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.