Yuvan Reply to Religion Controversy
Yuvan Reply to Religion Controversy

மூன்றாவது திருமணத்துக்காக தாங்கிவந்த இஸ்லாம் மதத்துக்கு மாறியதாக அவரது மனைவியிடம் ரசிகர் கேட்ட கேள்விக்கு யுவன் தற்போது பதில் அளித்துள்ளார்.

Yuvan Reply to Religion Controversy : தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் யுவன் சங்கர் ராஜா. இளையராஜாவின் மகனான இவர் ஏற்கனவே இரண்டு திருமணங்கள் செய்து விவாகரத்து செய்துவிட்டார்.

யுவனை பற்றி உருக்கமாக பதிவிட்ட அனிருத், அப்படி இன்ஸ் சொல்லியிருக்கார் பாருங்க – இணையத்தில் வைரலாகும் பதிவு

இதனையடுத்து கடந்த 2015ஆம் ஆண்டு ஜப்ருன் நிஷா என்பவரை திருமணம் செய்தார். 2016ம் ஆண்டு இவர்களுக்கு பெண் குழந்தையும் பிறந்தது.

இந்த நிலையில் இவரது மனைவி ஜப்ருன் நிஷா சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவ் சேட்டில் ரசிகர்களுடன் உரையாடினார்.

அப்போது ரசிகர் ஒருவர் உங்களை திருமணம் செய்து கொள்ளத்தான் யுவன் சங்கர் ராஜா இஸ்லாமியராக மாறினாரா? நீங்கள் கட்டாயப்படுத்தி தான் அவரை இஸ்லாம் மதத்திற்கு மாறினார்களா எனக் கேட்டார்.

அதற்கு நான் யுவன் சங்கர் ராஜாவைத் திருமணம் செய்வதற்கு 3 வருடங்களுக்கு முன்பாகவே அவர் இஸ்லாம் மதத்தை தான் பின்பற்றினார்.

வேண்டுமானால் அவரை ஒரு நாள் லைவ் சேட்டில் வரச் சொல்கிறேன் அவரிடமே கேட்டு கொள்ளுங்கள் என கூறினார்.

நான் வாங்கி வைத்திருந்த சரக்கும் தீர்ந்து போச்சு – ஒயின் ஷாப் ஓபனிங் பற்றி வெங்கட் பிரபு ஓபன் டாக்.!

அவர் கூறியபடியே தற்போது யுவன் சங்கர் ராஜா அளித்துள்ள பேட்டி ஒன்றில் எனக்கு ஒரு சில கேள்விகளுக்கு குரானிலிருந்து பதில் கிடைத்தது. அதனால் நான் இஸ்லாம் மதத்திற்கு மாறினேன் எனக் கூறியுள்ளார்.

அமைதி கிடைக்கும் மதமாக இஸ்லாம் அதன் எனக்கு தோன்றியது. இறந்த பின்னர் உம்முடைய ஆத்மா எங்கு செல்லும் என்ற கேள்விக்கு எனக்கு இஸ்லாம் மதத்தில் பதில் கிடைத்தது. அதனால் தான் நான் இந்த மதத்திற்கு மாறினேன் எனக் கூறியுள்ளார்.