16 வயதில் யுவன் ஷங்கர் ராஜா இசை அமைப்பாளராக ஒரு படத்திற்கு இசையமைத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் டி சிவா.

Yuvan in Debut Movie : தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் யுவன் சங்கர் ராஜா. பல்வேறு திரைப்படங்களுக்கு இசையமைத்து வரும் இவர் தன்னுடைய 16வது வயதில் இசையமைப்பாளராக திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார்.

டி சிவாவின் அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சரத்குமார், நக்மா உள்ளிட்டோர் நடிப்பில் உருவான படத்தின் மூலம் தன் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். அப்போது ஒரு விழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு பெருமை கொண்டுள்ளார் தயாரிப்பாளர் டி சிவா.

சரத்குமார் நக்மா மற்றும் பஞ்சு ஆகியோர்களுக்கு இடையே சிறுவனாக நின்று கொண்டுள்ளார் யுவன் சங்கர் ராஜா. இந்த புகைப்படம் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.