Yuvan About Valimai Music
Yuvan About Valimai Music

வலிமை படத்தின் மியூசிக் குறித்து யுவன் சங்கர் ராஜா நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தகவல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Yuvan About Valimai Music : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித் இவரது நடிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். போனி கபூர் தயாரிக்கிறார். வினோத் படத்தை இயக்குகிறார்.

இன்று யுவன் சங்கர் ராஜா தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருவதால் ஒட்டுமொத்த திரையுலக பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

வேலையின்மை சங்கர் ராஜா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது வலிமை படத்தின் இசை குறித்து கேட்டதற்கு சும்மா செய்யுறோம்.. இசை அப்படி மரண மாஸாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

அஜித்துக்கு தம்பியான இளம் நடிகர்.. சூடு பறக்கும் வலிமை அப்டேட் – அது யார் தெரியுமா??(Opens in a new browser tab)

அதேபோல் சில வருடங்களுக்கு முன்பு டிடி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது தல அஜித்துக்கு ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு விதமான மாசான மியூசிக் கொடுத்திருக்கீங்க. அது எப்படி அவரோடு பணிபுரிந்த அனுபவம் குறித்துச் சொல்லுங்கள் என கேட்டிருந்தார்.

அதற்கு யுவன் நான் தல ஃபேன்.. எங்க ரெண்டு பேருக்கும் இடையே நல்ல கெமிஸ்ட்ரி இருக்கு. நல்ல மனிதரை அஜித்தை எனக்கு ரொம்ப பிடிக்கும் என பேசியுள்ளார்.

யுவன் சங்கர் ராஜா அஜித் குறித்து பேசிய வீடியோக்களை சமூக வலைதளங்களில் அஜித் ரசிகர்கள் வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர்.