Yuvan About Saddest Moments in Life
Yuvan About Saddest Moments in Life

எனக்கு தற்கொலை செய்து கொள்ள எண்ணம் தோன்றியது என யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.

Yuvan About Saddest Moments in Life : தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் யுவன் சங்கர் ராஜா. இவருடைய பாடல்களுக்கு உலகம் முழுவதும் பலர் அடிமையாக உள்ளனர்.

நேற்று இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார். அப்போது வலிமை பற்றி கேட்டதற்கு வலிமை பின்னணி இசை பயங்கரமாக இருக்கும் என கூறியிருந்தார்.

மேலும் விஜய் குறித்து கேட்டதற்கு விஜயுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாகவும் வாய்ப்பு வந்தால் உடனே செய்து விடலாம் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

சைலண்டாக நடந்து முடிந்த செம்பருத்தி சீரியல் நடிகர் கதிரின் நிச்சயதார்த்தம் – மனைவியாக போவது யார் தெரியுமா? புகைப்படத்துடன் இதோ!

இதனைத் தொடர்ந்து இன்னொரு ரசிகர் அண்ணா உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப் பெரிய பயம் எது? எப்படி அதை கடந்தீர்கள் என கேட்டிருந்தார்.

அதற்கு யுவன் சங்கர் ராஜா இஸ்லாம் மதத்திற்கு மாறுவதற்கு முன்னர் எனக்கும் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றியது. ஆனால் என்னை அதிலிருந்து மீட்டது இஸ்லாமியம் தான் என கூறியுள்ளார்.