Yuvan About Ajith Movie
Yuvan About Ajith Movie

Yuvan About Ajith Movie : தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் யுவன் சங்கர் ராஜா. அஜித் விஜய் சூர்யா தனுஷ் என பல நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

அதிலும் குறிப்பாக யுவன் சங்கர் ராஜா மற்றும் தல அஜித் கூட்டணி என்றால் நிச்சயம் அந்த படத்தின் மியூசிக் வேற லெவல் தான் இருக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

குறிப்பாக இவர்கள் கூட்டணியில் உருவான மங்காத்தா படத்தின் தீம் மியூசிக் இன்றுவரை ஒட்டுமொத்த ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒன்றாக இருந்து வருகிறது.

Yuvan About Valimai Music

தனக்கு மிகவும் பிடித்த தீம் மியூசிக் மங்காத்தா படத்தின் தீம் மியூசிக் தான் என தெரிவித்துள்ளார். மேலும் அந்த மியூசிக்கை கேட்கும்போதெல்லாம் அஜித்தின் ஞாபகம் வர வேண்டும் என்ற நோக்கத்திலேயே இதனை உருவாக்கியதாக தெரிவித்துள்ளார்.

இருப்பினும் இந்த தீம் மியூசிக் இந்த அளவிற்கு வெற்றியை பெறும் என துளியும் எதிர்பார்க்கவில்லை என பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் யுவன் சங்கர் ராஜா.

தான் இசையமைத்த படங்களிலேயே தனக்கு மிகவும் பிடித்த தீம் மியூசிக் மங்காத்தா படத்தின் மியூசிக் தான் என யுவன்சங்கர்ராஜா தெரிவித்துள்ளது அஜித் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தயுள்ளது.