மலேசியா வாசுதேவன் மகனின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்திய திரையுலகில் முன்னணி பாடகராகவும் நடிகராகவும் வலம் வந்தவர் மலேசியா வாசுதேவன். இவருடைய மகன் யுகேந்திரனும் சினிமாவில் நடிகராக ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

தற்போது வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்ட இவர் பெரியதாக படங்களில் கவனம் செலுத்தாமல் பிசினஸை கவனித்து வருகிறார். மாலினி என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு மூன்று மகன்கள் இருக்கின்றனர்.

இந்த நிலையில் யுகேந்திரன் தமிழ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு பிடித்தமான பாடல்களை பாடி வெளியிட தொடங்கி உள்ளார். இந்த நிலையில் அவர் பாட்டு பாடி வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக இவர் இவ்வளவு அழகாக பாடுவாரா என பலரும் ஆச்சரியத்தோடு கமெண்ட் அடித்து வருகின்றனர்.