வாரிசு திரைப்படத்தில் விஜயின் யூத் திரைப்படத்தில் இடம்பெற்று இருந்த ஆல்தோட்ட பூபதி என்ற பாடலை இப்படத்தில் ரீமிக்ஸ் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரசிகர்களால் இளைய தளபதி என்று அன்போடு அழைக்கப்பட்டு வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது வம்சி படைப்பள்ளி இயக்கிக் கொண்டிருக்கும் வாரிசு திரைப்படத்தில் இறுதி கட்ட படப்பிடிப்பில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க யோகி பாபு, சரத்குமார், பிரபு, குஷ்பூ, ஷாம், சங்கீதா, ஸ்ரீகாந்த் போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் இப்படத்தில் இணைந்து முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருக்கும் நிலையில் இப்படத்தில் புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தில் விஜய் நடிப்பில் 2002 ஆம் வெளியான யூத் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள “ஆல்தோட்ட பூபதி” என்ற பிரபல பாடலை வாரிசு திரைப்படத்தில் ரீமேக் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மணி ஷர்மா இசையமைத்திருந்த இப்பாடலை இசையமைப்பாளர் தமன் ரீமேக் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்பாடல் வாரிசு படத்தின் முதல் சிங்கிள் பாடலாக வெளியாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.