petta

பேட்ட படத்தில் இடம் பெற்ற மரண மாஸ் பாடலுக்கு வாலிபர்கள் சிலர் நடனமாடும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து கடந்த பொங்கலுக்கு வெளியான திரைப்படம் பேட்ட. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட் என்றாலும், மரணமாஸ் குத்து பாடல் பலரையும் கவர்ந்தது.

இந்நிலையில், பொதுவெளியில் ஒரு இசைக்குழு இப்பாடலை இசையமைக்க வாலிபர்கள் பலர் சேர்ந்த கூட்டாக நடனமாடும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். இந்த வீடியோவிற்கு அனிருத்தும் லைக் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.