rape
இளம்பெண்ணை மயக்கி வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்ய அதை அவரின் தாயே வீடியோ எடுத்த சம்பவம் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

Young girl drugged and raped accused family arrested – சத்தீஸ்கர் மாநிலம் பலோடோ பஜார் பகுதியில் வசித்து வரும் வாலிபர் ஒருவர், 19 வயது பெண்ணை காதலித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு அப்பெண்ணை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது, அந்த வாலிபரின் தாயாரும் அப்பெண்ணை உபசரித்து திண்பண்டங்களை கொடுத்துள்ளார்.

ஆனால், அதில் போதை மருந்து கலந்திருக்கவே சிறிது நேரத்தில் அப்பெண் மயங்கினார்.

இதையடுத்து அவரை படுக்கையறைக்கு தூக்கி சென்று வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்தார்.

அதை அவரின் தாயே வீடியோ எடுத்துள்ளார். அதன்பின், அந்த வாலிபரின் சகோதரி மற்றும் அவரின் கணவர் சேர்ந்து அப்பெண்ணிடம் வீடியோவை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனர்.

கள்ளக்காதலனுடன் காட்டுக்குள் சென்ற பெண் ; சுற்றிவளைத்த 6 பேர் : சேலத்தில் அதிர்ச்சி

எனவே, தனது தந்தை நிலம் விற்று வீட்டில் வைத்திருந்த ரூ.4 லட்சம் பணத்தை அப்பெண் கொடுத்துள்ளார். ஆனால், மீண்டும் பணம் கேட்டு அவர்கள் அப்பெண்ணை மிரட்டியுள்ளனர்.

மேலும், பணம் எங்கே என தந்தை கேட்ட போது, கதறி அழதபடி நடந்தவற்றை அப்பெண் கூறியுள்ளார்.

இதையடுத்து அப்பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, அந்த வாலிபர் மற்றும் குடும்பத்தினரை போலீசார் கைது செய்து விசாரணை அளித்து வருகின்றனர்.