Young Face Pack
Young Face Pack

Young Face Pack :

என்றும் இளமையை தரும் இந்த ஃபேஸ் பேக்கை நீங்களே தயாரிக்கலாம் :

☆ 30 வயதில் சருமமானது 1.5% கொலாஜனை இழக்கும். இருப்பினும் ஒரு சில செயல்களின் மூலம், சருமத்தில் உள்ள கொலாஜன் அளவை அதிகரித்து, நீண்ட நாட்கள் இளமையுடன் காட்சியளிக்கலாம்.

☆ கொலாஜென் என்பது ஒருவகை புரோட்டீன், இது சருமச் செல்களை இணைக்கும் ஓர் இணைப்புத்திசு ஆகும். இந்த இணைப்புத்திசு போதுமான அளவில் கிடைத்தால், இளமை தக்க வைக்கப்படுவதோடு, சருமம் சுருக்கமின்றியும் இருக்கும்.

☆ ஒருவரது சருமத்தில் கொலாஜன் போதுமான அளவில் இருந்தால், 50 வயதானாலும் இளமையுடன் காட்சியளிக்கலாம்.

☆ கொலாஜன் உற்பத்தியை பல வழிகளில் அதிகரிக்கலாம். அதில் ஒன்று ஃபேஸ் பேக்குகளின் மூலம் அதிகரிப்பது. இந்த பதிவில் சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கும் ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை அடிக்கடி பயன்படுத்தி, உங்கள் இளமையைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள்.

(1) தயிர் மற்றும் பீச் பழம்:

ஒரு பீச் பழத்தை நன்கு அரைத்து, அத்துடன் 3 டேபிள் ஸ்பூன் தயிரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

அதன் பின் அந்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் தடவி கைவிரல்களால் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும்.

பின்பு 20 நிமிடம் நன்கு ஊற வைத்து, நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இறுதியில் மாய்ஸ்சுரைசர் தடவ வேண்டும்.

(2) எலுமிச்சை சாறு மற்றும் முட்டை:

ஒரு பௌலில் முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்துக் கொண்டு, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றினைக் கலந்து கொள்ள வேண்டும். பின்பு அந்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் தடவி , 2-3 நிமிடம் மசாஜ் செய்து உலர வைக்க வேண்டும்.

முகத்தில் தடவிய கலவை நன்கு காய்ந்த பின் முகத்தை நீரால் தேய்த்துக் கழுவ வேண்டும். இறுதியில் மாய்ஸ்சுரைசர் எதைனும் பயன்படுத்துங்கள்.

(3) கிவி மற்றும் அவகேடோ

கிவி பழத்தை இரண்டாக வெட்டி, அதன் ஒரு பாதியை எடுத்துக் கொள்ள வேண்டும். அதேப் போல் அவகேடோ பழத்தின் ஒரு பாதியையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் அவற்றை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து, முகம் மற்றும் கழுத்தில் தடவ வேண்டும்.

30 நிமிடம் நன்கு ஊற வைத்த பின், வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இறுதியில் முகத்தை துணியால் துடைத்து, மாய்ஸ்சுரைசர் எதையேனும் பயன்படுத்த வேண்டும்.

(4) பப்பாளி, அன்னாசி மற்றும் தர்பூசணி பேக்:

மிக்ஸியில் சிறிது பப்பாளி, அன்னாசி மற்றும் தர்பூசணி போட்டு நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். அதன் பின் அதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 20 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.

இறுதியில் நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இதனால் சருமம் இளமையுடன் காட்சியளிக்கும். இந்த செயலை அடிக்கடி செய்தால் நல்ல பலனைக் காணலாம்.

(5) வெள்ளரிக்காய் மற்றும் முட்டை:

முட்டையின் வெள்ளைக்கருவை ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் மிக்ஸியில் சிறிது வெள்ளரிக்காயைப் போட்டு அரைத்து, வெள்ளைக்கருவுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

அதன் பின் அத்துடன் சில துளிகள் விருப்பமான நறுமண எண்ணெய் எதையாவது சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பின்பு அந்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.

இறுதியில் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவி, துணியால் முகத்தைத் துடைத்து, மாய்ஸ்சுரைசரைத் தடவ வேண்டும்.

(6) காபி மற்றும் உலர்ந்த முந்திரி

மிக்ஸியில் சிறிது உலர்ந்த முந்திரி பழத்தைப் போட்டு அத்துடன் சிறிது காபித் தூள் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அந்த கலவையை முகத்தில் தடவி 20 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.
பின்பு நீரால் முகத்தைக் கழுவி, முகத்தை துணியால் துடைத்து, மாய்ஸ்சுரைசர் எதையாவது பயன்படுத்துங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here