Young Beauty Tips
Young Beauty Tips

இளமையாக இருக்க உதவும் பானம், எது, தெரியுமா உங்களுக்கு?

Young Beauty Tips :

☆ நமது உடலானது 60 சதவிகிதம் தண்ணீரால் உருவாக்கப்பட்டது. ஆனால் நாம் அதை சரியாக பாதுகாத்துக் கொள்ளும் அளவிற்கு தண்ணீர் அருந்துவதில்லை. குறைவான தண்ணீர் அருந்துபவர்கள் ஆரோக்கியம் தரும் பானங்களை அருந்துவது மிகவும் அவசியம் ஆகும்.

☆ இதை சரி செய்ய தினமும் காலையில் நாம் குடிக்கும் தண்ணீருடன் எலுமிச்சை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் உடலில் உள்ள செல்கள் புத்துணர்ச்சி பெறுவதுடன், உடலுக்கு வைட்டமின் சி, சிட்ரிக் அமிலம், நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புச்சத்து போன்றவை கிடைக்கிறது.

☆ எலுமிச்சை தண்ணீர்:
தண்ணீருடன் எலுமிச்சையை நான்கு துண்டுகளாக நறுக்கி போட்டாலே புளிப்பு சுவை கலந்து சுவை கொடுக்கும் இதைதான் “எலுமிச்சை தண்ணீர்” என்று சொல்கிறார்கள்.

☆எலுமிச்சை தண்ணீரின் பயன்கள்:

(1) எலுமிச்சை தண்ணீர் தலைவலியை குறைக்கும்.

(2) மூளையில் உள்ள செல்களை புத்துணர்ச்சியுடன் வைத்து ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும்.

(3)எலுமிச்சை தண்ணீர் ஆன்டிசெப்டிக் ஆக செயல்பட்டு வாயில் உள்ள கெட்ட கிருமிகளை நீக்கி, துர்நாற்றத்தில் இருந்து விடுவிக்கும். வாயை எப்போதும் புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவும்.

(4) எலுமிச்சையில் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால், அது உடலில் இரத்த அளவை சரியான அளவில் வைத்துக் கொள்ள உதவும். இதனால் ரத்த அழுத்தம் ஏற்படாது.

(5) எலுமிச்சை தண்ணீர் பருகி வந்தால் இதய கோளாறுகளில் இருந்து விடுபடலாம் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.

(6) நுரையீரலில் படிந்துள்ள அழுக்கை அகற்றி, சுவாச மண்டலத்தை சுத்தம் செய்வதோடு தடையின்றி சுவாசிக்க உதவும்.

(7) தினமும் காலை 500 மில்லி லிட்டர் எலுமிச்சை தண்ணீர் அருந்தினால் செரிமானத் திறனை அதிகப்படுத்தும். மேலும், உணவு செரிமான மண்டலத்தை சுத்தப்படுத்தும்.

(8) தினமும் எலுமிச்சை தண்ணீர் குடித்து வந்தால், சிறுநீரக கோளாறுகள் மற்றும் தொற்று நோய்கள் நீங்கும். மலச்சிக்கல் போன்ற தொந்தரவுகளில் இருந்தும் விடுபடலாம்.

(9) கல்லீரலை சுத்தம் செய்து, அதன் வேலையை செம்மையாக செய்ய உதவுகிறது.

(10) எலுமிச்சை தண்ணீர் இளம் வயதில் முதிர்ச்சி தன்மை அடைவதிலிருந்தும், ஒழுக்கத்தில் இருந்தும் பாதுகாக்கும். எப்போதும் இளமையாக இருக்க உதவும்.

(11) தினமும் காலை காபி குடிப்பதற்கு பதிலாக, மிதமான சூட்டில் எலுமிச்சை தண்ணீரை குடித்து வந்தால் மனதுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.

(12) நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நோய்களுக்கு எதிராக போராட உதவுகிறது. உடல் எடையைக் குறைத்து ஆரோக்கியமாக வாழ வழி செய்கிறது.

(13) எலுமிச்சையை சருமங்களிலும் உடலிலும் தேய்த்துக் கொண்டால் பூச்சிகளின் தொந்தரவுகளை தவிர்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here