யோகி பாபு தற்போது புதிய படத்தில் நடிக்க உள்ளார் அப்படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றது. அந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல முன்னணி காமெடி நட்சத்திரமாக திகழ்ந்து வரும் யோகி பாப சில படங்களில் கதாநாயகனாகவும் தற்போது நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் தற்போது கதாநாயகனாக நடிக்க இருக்கும் படத்தின் பெயர் தான் “கருமேகங்கள் கலைகின்றன” இப்படம் குறித்த தகவல் சில வாரங்களுக்கு முன்பு வெளியான நிலையில் தற்போது இப்படத்திற்கான பூஜை வெகு சிறப்பாக இன்று நடந்து முடிந்தது.

இயக்குனர் தங்கர் பச்சன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் பாரதிராஜா, கௌதம் மேனன் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் ஜிவி பிரகாஷ் குமார் இசையில் உருவாகும் இப்படத்தை வீரசக்தி என்பவர் தயாரிக்கிறார். மேலும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு இன்று கும்பகோணத்தில் தொடங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.