ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை நடிகர் யோகி பாபு பதிவிட்டு இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்திருக்கும் இவர் ஏராளமான திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகர் யோகி பாபு தற்போது பிரபல கிரிக்கெட் அணி வீரர் எம்.எஸ்.தோனி அவர்களின் தயாரிப்பு நிறுவனத்தில் முதல் படமாக உருவாகும் ‘லெட்ஸ் கெட் மேரீட்’ என்னும் திரைப்படத்திலும் நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறார்.

மேலும் ஒரு சில பான் இந்தியா திரைப்படங்களிலும் நடித்துவரும் யோகி பாபு எப்போதும் சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜிம்மில் கடுமையாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வைரலாகி வருகிறது.