Yogi babu

Viswasam Yogi Babu : இதுவரை எவ்வளவோ படங்களில் நடித்திருந்தாலும் விஸ்வாசம் தான் ஸ்பெஷல் படம் என்பது போல யோகி பாபு புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் இன்றைய முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. இவர் தற்போது அஜித்துடன் விஸ்வாசம் படத்தில் சேர்ந்து நடித்துள்ளார். இந்த படம் இன்று திரைக்கு வந்துள்ளது.

அதேபோல் தளபதி விஜயுடன் சேர்ந்து மெர்சல், சர்கார் ஆகிய படங்களில் நடித்திருந்தார். இந்த படங்களை தொடர்ந்து தளபதி 63 படத்திலும் நடிக்க உள்ளார்.

அஜித், விஜய் இரண்டு பேருமே இப்படி தான் – யோகி பாபு வெளியிட்ட உண்மை தகவல்.!

இப்படி இதுவரை பல படங்களில் நடித்திருந்தாலும், இனி நடிக்க இருந்தாலும் விஸ்வாசம் அவரது வாழ்க்கையில் மறக்க முடியாத படமாக அமைந்துள்ளது.

ஆம், யோகி பாபுவிற்கு விஸ்வாசம் 100-வது படமாக அமைந்துள்ளது. இது குறித்து அவரே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here