Yogi babu Upcomming Movie Salary

கொரானா பேரிடர் காலத்தை பொருட்படுத்தாமல் யோகி பாபு தன் சம்பளத்தை உயர்த்திக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Yogi Babu Upcoming Movies Salary : தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. சினிமாவில் அடிமட்டத்திலிருந்து உயர்ந்து இன்று முக்கிய இடம் பிடித்திருப்பவர்.

தமிழ் சினிமாவில் உருவாகும் பெரும்பாலான படங்களில் காமெடி நடிகராக யோகிபாபு தான் நடித்து வருகிறார். மேலும் தற்போது ஹீரோவாகவும் தொடர்ந்து சில படங்களில் நடிக்கிறார்.

ஏற்கனவே ஒரு நாளைக்கு எட்டு லட்சம் ரூபாய் சம்பளமாக வாங்கி வந்த யோகி பாபு தற்போது தன்னுடைய சம்பளத்தை மேலும் உயர்த்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சவாலை நிறைவேற்றிய விஜய்.. மகேஷ் பாபு கொடுத்த கமெண்ட்..!

நடிகர் யோகி பாபு இந்த கொரானா பேரிடர் காலத்தையும் பொருட்படுத்தாமல் தன்னுடைய சம்பளத்தில் இரண்டு லட்சத்தை அதிகரித்திருப்பதாகவும் இதனால் இனி அவருடைய ஒரு நாள் சம்பளம் 10 லட்சம் எனவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

இதனால் ரசிகர்கள் பலரும் கஷ்டத்தில் இருந்து உயரத்திற்கு வந்த யோகி பாபுக்கு தற்போதைய சூழ்நிலையும் தயாரிப்பாளர்களின் கஷ்டத்தையும் புரிந்து கொள்ள முடியாதா என கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் உண்மையில் இது எந்த அளவிற்கு உண்மை என்பதை யோகி பாபு தான் விளக்கம் கொடுக்க வேண்டும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.