Yogi Babu Speech and Decision After Dharma Prabhu Release | Kollywood Cinema News | Tamil Cinema News | Dharma Prabhu Reviews
இனி ஹீரோவாக நடிக்க மாட்டேன் என தர்ம பிரபு படத்திற்கு பிறகு அறிவித்துள்ளார் யோகி பாபு.

Yogi Babu Speech : தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. இவர் நாயகனாக நடித்திருந்த தர்ம பிரபு திரைப்படம் நேற்று வெளியாகி இருந்தது.

முழுக்க முழுக்க காமெடியை மையமாக கொண்டு அரசியல் வாதிகளை நையாண்டி செய்திருந்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

படத்தின் முதல் நாள் முதல் காட்சியை யோகி பாபு ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்த்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் உலகத்துக்கே தர்ம பிரபுவான எம தர்ம வேடத்தில் நடித்திருந்தது மகிழ்ச்சியாக உள்ளது.

முத்த காட்சிக்கு கிரீன் சிக்னல், ஆனால்? – பெரிய ஷாக் கொடுத்த ப்ரியா பவானி ஷங்கர்.!

படத்திற்கு பல இடங்களில் ரசிகர்கள் கை தட்டி ரசித்தார்கள். இனி ஹீரோவாக நடிக்க மாட்டேன். சிவகார்திகேயன், விஜய் சேதுபதி ஆகிய நடிகர்களுடன் சேர்ந்து காமெடி செய்வேன் என அறிவித்துள்ளார்.

தர்ம பிரபு படத்தை போல யோகி பாபு கூர்க்கா மற்றும் பன்னிக்குட்டி ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

YouTube video

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.