Yogi Babu & Viswasam : விஸ்வாசம் படத்தில் தல அஜித் காட்சி ஒன்றில் தன்னை திட்டி நடிக்க வைத்ததாக பேட்டி ஒன்றில் யோகி பாபு கூறியுள்ளார்.
தல அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்துள்ள படம் விஸ்வாசம். இந்த படம் உலகம் முழுவதும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
படத்தில் தற்போதைய ட்ரெண்டிங் காமெடியனாக யோகி பாபுவும் நடித்துள்ளார். இந்த படத்தை பற்றி யோகி பாபு சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அந்த பேட்டியில் தல அஜித்தை தன்னை ஒரு காட்சியில் திட்டி தான் நடிக்க வைத்தார் என கூறியுள்ளார். அதாவது மெர்சல் படத்தில் விஜயை கலாய்ப்பது போல ஒரு காட்சி இருக்கும்.
அந்த காட்சியில் நடிக்க தயங்கிய போது விஜய் சும்மா நடிங்க என கூறி நடிக்க வைத்தார்.
அதே போல விஸ்வாசம் படத்தில் அஜித்தின் தோல் மீது கை போட்டு வசனம் பேசுவது போல காட்சி உள்ளது.
அதில் நடிக்க தயங்கினேன். அப்போது அஜித் சார் டேய் நடிடா என என்னை அன்பாக திட்டி நடிக்க வைத்தார் என கூறியுள்ளார்.
மேலும் விஸ்வாசம் படம் முழுவதும் தான் வருவேன் எனவும் கூறியுள்ளார்.