
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக அஜித், விஐய் என மெகா ஹிட் நடிகர்கள் முதல் வளர்ந்து வரும் நடிகர்களின் படங்கள் வரை தொடர்ந்து பிஸியாக நடித்து வருபவர் யோகி பாபு.
கோலமாவு கோகிலா என்ற படத்தில் நயன்தாராவுக்கு இணையாக நடித்து இருந்தார். இந்நிலையில் தற்போது யோகி பாபுவிற்கும் பிரபல நடிகையான மனிஷா யாதாவிற்கும் திருமணம் நடிப்பது போல மணக்கோலத்தில் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதனால் உண்மையில் யோகி பாபுவிற்கு திருமணமா என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆனால் இது குறித்து விசாரிக்கையில் இது சண்டி முனி என்ற படத்தில் இடம்பெறும் காட்சி என்பது தெரிய வந்துள்ளது. மேலும் இப்படத்தில் நாயகனான நட்டி நடராஜ் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.