ரஜினியின் ஆஸ்தான இயக்குனர் படத்தில் ஹீரோவாகும் யோகிபாபு – லேட்டஸ்ட் அப்டேட்

Yogi Babu Next Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு.

அஜித், விஜய், ரஜினிகாந்த், சூர்யா, தனுஷ் என அத்தனை நடிகர்களின் படங்களிலும் இவர் நடித்து விட்டார்.

தமிழ் சினிமாவில் வெளியாகும் பெரும்பாலான படங்களில் காமெடி நட்சத்திரமாக யோகி பாபு தான் நடித்து வருகிறார். மேலும் இவர் சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். தற்போதும் பன்னிக்குட்டி உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இவளுக்கு பெரிய நயன்தாரானு நெனப்பு என சொன்னாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லைக்கா இப்படி?

இந்த நிலையில் இவர் அடுத்ததாக பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்த முதல் கட்ட பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் இதற்கான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.

நடிகர் யோகி பாபு நடிப்பில் வெளியான தர்ம பிரபு, கூர்க்கா உள்ளிட்ட படங்கள் நல்ல வெற்றியை பெற்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.