Yogi Babu Marriage Secrets
யோகி பாபுவின் திருமணத்தில் பல ரகசியங்கள் ஒளிந்திருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் பேசப்பட்டு வருகிறது.

Yogi Babu Marriage Secrets : தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. அஜித், விஜய், ரஜினி என டாப் ஸ்டார் முதல் அறிமுக நடிகர்களின் படங்கள் வரை அனைவருடனும் கூட்டணி அமைத்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று தான் இவருக்கும் மஞ்சு பார்கவி என்ற இவரின் உறவினர் பெண்ணுக்கும் திருமணம் நடந்தது.

திருத்தணியில் இவர்கள் திருமணம் நடைபெற இருந்த நிலையில் இறுதி நேரத்தில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள மேல்நகர்ப்பேடு என்ற கிராமத்தில் யோகி பாபுவின் குல தெய்வம் கோயிலில் இவர்களின் திருமணம் நடந்துள்ளது.

இந்த திருமணத்தில் எண்ணி 10 பேர் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். அவ்வளவு ஏன் பெண்ணின் பெற்றோர்கள் கூட திருமணத்தில் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.

இதற்கெல்லாம் என்ன காரணம்? இறுதி நேரத்தில் ஏன் இந்த இடமாற்றம்? ஏன் இந்த சத்தமில்லாத திருமணம்? என்பதற்கெல்லாம் யோகி பாபு தான் சரியான விளக்கம் கொடுக்க வேண்டும்.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.