Yogi Babu Marriage
யோகி பாபுவுக்கு வரும் பிப்ரவரி 5-ம் தேதியில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. இவருக்கு இந்த நடிகையுடன் திருமணம் அந்த நடிகையுடன் திருமணம், திருமணம் முடிஞ்சிடுச்சு என இதுவரை பல தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அது அத்தனையும் வதந்தி.

தற்போது உண்மையாகவே யோகி பாபுவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு விட்டது, இது காதல் திருமணம் அல்ல, வீட்டில் பெற்றோர்கள் பார்த்து வைக்கும் திருமணம். பார்கவி என்ற சாதாரண குடும்பத்தை சேர்ந்த பெண்ணை தான் யோகி பாபு கரம்பிடிக்க உள்ளாராம்.

வரும் பிப்ரவரி 5-ம் தேதி யோகி பாபுவுக்கு பார்கவிக்கும் திருமணம் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.