Yogi Babu Look in School Life

நடிகர் யோகி பாபுவின் பள்ளிப்பருவ புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

Yogi Babu Look in School Life : தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமான யோகி பாபு பெரும்பாலான நடிகர்களுடன் இணைந்து நடித்து விட்டார்.

தற்போது காமெடி நடிகராக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் சில படங்களில் நடித்து வருகிறார். கொஞ்சம் குண்டான உருவம், சுருட்டை முடி என்பதே யோகி பாபுவின் அடையாளம்.

ஆனால் இவர் பள்ளிப் பருவத்தில் தற்போது இருப்பதற்கு மாறாக இருந்துள்ளார். ஒல்லியா ஸ்லிம்மா ஸ்மார்ட்டாக இருந்துள்ளார்.

நண்பனும் தம்பியும்.. விஜய் பிறந்தநாளில் அஜித் குறித்து பதிவிட்ட முக்கிய அரசியல் பிரபலம் – வைரலாகும் பதிவு

இவருடைய பள்ளிப்பருவ புகைப்படம் ஒன்று யோகி பாபு பெயரில் இயங்கி வரும் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

இது யோகி பாபுவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் இல்லை என்றாலும் வெளியாகி உள்ள புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

யோகி பாபுவா இது என பலரையும் வியக்க வைத்து வருகிறது.