விஜய் 66 படத்தில் பிரபல காமெடி நடிகர் இணைந்து இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Yogi Babu in Vijay 66 : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக தளபதி விஜய் தெலுங்குவில் வம்சி இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்கவுள்ளார்.

தில் ராஜு அவர்கள் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க பல நடிகைகளின் பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில் ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு வரும் ஏப்ரல் 6ஆம் தேதி வெளியாகும் எனவும் சொல்லப்பட்டது.

இப்படியான நிலையில் தற்போது இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா அதைத் தொடர்ந்து பிரபல காமெடி நடிகர் யோகிபாபு நடிக்க இணைந்து இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் விஜய் 66 படத்தில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது என ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.