அட்லியின் பாலிவுட் படத்தில் பிரபல தமிழ் நடிகர் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Yogi Babu in Sharukkhan Movie : தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனரான ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அட்லி. ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் அதன் பின்னர் தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் என மூன்று படங்களை இயக்கினார்.

அட்லியின் பாலிவுட் படத்தில் ஒப்பந்தமான பிரபல தமிழ் நடிகர்.. இந்திலும் தெறிக்க போகும் செம்ம காமெடி.!!

இந்தப் படங்களைத் தொடர்ந்து தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக் கானை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் புனேவில் வெகு விரைவில் தொடங்க உள்ளன. பாலிவுட் படம் என்றாலும் இதில் பணிபுரியும் தொழில்நுட்பக் கலைஞர்களை தமிழ் சினிமாவில் இருந்து தான் தேர்வு செய்துள்ளார் அட்லி.

”ஜல்லிக்கட்டு’ தொடர்பாக, தமிழக அரசுக்கு இன்று ஜகோர்ட் உத்தரவு

ஜிகே விஷ்ணு படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய ஏ ஆர் ரகுமான் படத்திற்கு இசையமைக்கிறார். நாயகியாக நயன்தாரா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர்களைத் தொடர்ந்து இந்த படத்தில் காமெடியனாக நடிக்க நடிகர் யோகிபாபு ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Annaatthe முதல் Beast வரை..? Sun Pictures தயாரிக்கும் படங்களின் RELEASE தேதி – வெளியான முழு விவரம்.!

இந்த படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் ராணுவத்தை பின்னணியாகக் கொண்ட கதை என்பதால் படத்துக்கு ஜவான் என டைட்டில் வைத்து இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.