பிரபல மலையாள இயக்குனர் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் திரைப்படம் பூஜையுடன் தொடங்கி யுள்ளது.

Yogi Babu in New Movie Pooja : மலையாள திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வரும் இயக்குநர் ரெஜிஷ் மிதிலா தமிழில் யோகிபாபுவை நாயகனாக வைத்து ஒரு புதிய படத்தை உருவாக்குகிறார். ரெஜிஷ் மிதிலா எழுதி, இயக்கி, தயாரிக்கும் இத்திரைப்படம் முழுக்க, முழுக்க ஃபேண்டஸி திரைப்படமாக உருவாகவுள்ளது. பெயரிடப் படாத ‘புரொடக்‌ஷன்1’ ஆக உருவாகும் இப்படத்தின் பூஜையில் படக்குழுவினர் மற்றும் திரைபிரபலங்கள் கலந்து கொள்ள எளிய முறையில் நடைபெற்றது.

நாளை ‘ஆஷஸ்’ மேட்ச் : இங்கிலாந்து அணி வீரர்கள் அறிவிப்பு

பிரபல மலையாள இயக்குனருடன் இணைந்த யோகிபாபு - பூஜையுடன் தொடங்கிய ஃபேண்டஸி திரைப்படம்.!!
பிரபல மலையாள இயக்குனருடன் இணைந்த யோகிபாபு - பூஜையுடன் தொடங்கிய ஃபேண்டஸி திரைப்படம்.!!

யோகிபாபு மற்றும் ரமேஷ் திலக் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, ஊர்வசி, கருணாகரன், ஜார்ஜ் மரியன், ஹரீஷ் பேரடி, மருது பட்டி(குளப்புள்ளி லீலா), நாகவிஷால் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் எளிய பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக சென்னை, ராஜஸ்தான் மற்றும் இந்தியாவின் பல பகுதிகளில் நடத்த படக்குழு திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரொம்ப பெருமையா இருக்கு – 3:33 Movie Celebrities Review | Sandy, Losliya,Tharshan, Sathish | HD