Yogi babu bommai nayagi first look update
Yogi babu bommai nayagi first look update

யோகி பாபு ஹீரோவாக நடிக்கும் பொம்மை நாயகி திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து இன்று முன்னணி காமெடி நடிகராக பல நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார் யோகி பாபு.

காமெடி நடிகராக மட்டுமல்லாது ஹீரோவாகவும் சில படங்களில் நடித்து வருகிறார். காமெடி கதைக்களத்தை மையமாக கொண்டு இவர் நடித்து வெளிவந்த படங்கள் நல்ல வெற்றியை பெற்றுள்ளன.

இதனை தொடர்ந்து தற்போது பா ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஷான் என்பவரது இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு கே எஸ் சுந்தர மூர்த்தி இசையமைக்க அதிசயராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். செல்வா ஆர் கே எடிட்டிங் பணிகளை மேற்கொண்டு உள்ளார்.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது யோகி பாபுவின் பிறந்த நாளான ஜூலை 22-ம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.