Yogi Babu

Yogi Babu Fav Movie : விஜயுடன் சர்கார் அஜித்துடன் விஸ்வாசம் ஆகிய படங்களில் நடித்திருந்தாலும் தனக்கு பிடித்த படம் இது தான் என யோகி பாபு கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர் யோகி பாபு. இவர் வருடத்திற்கு பல படங்களில் நடித்து வருகிறார். 2018-ல் குறிப்பாக தளபதி விஜயுடன் சர்கார், அஜித்துடன் விஸ்வாசம் ஆகிய படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்திருந்த பேட்டி ஒன்றில் 2018-ல் நீங்கள் நடித்த படங்களிலேயே உங்களுக்கு அதிகம் பிடித்த படம் எது என கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்கு யோகி பாபு பரியேறும் பெருமாள் தான் எனக்கு பிடித்த படம் என கூறியுள்ளார்.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்று வெற்றி பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அஜித், விஜய் இவர்களுடன் இணைந்து நடித்ததால் இவர்களில் யாருடைய படத்தையாவது கூறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பரியேறும் பெருமாள் தான் என கூறியது கொஞ்சம் ஆச்சரியம் தான் என ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.