Yogi Babu 1st salary

Yogi Babu 1st Salary : லட்சம் லட்சமாக சம்பளம் வாங்கும் யோகி பாபு முதல் முறையாக வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் யோகி பாபு. இவர் தற்போது தர்மபிரபு என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தை யோகி பாபுவின் ரூம் மேட்டான முத்துக்குமரன் தான் இயக்கியுள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

அப்போது பேசிய இயக்குனர் முத்துக்குமரன் முதல் முதலாக லொள்ளுசபா நிகழ்ச்சியின் மூலம் யோகி பாபு வாங்கிய சம்பளம் ரூ 300 தான்.

அந்த காசு வந்தால் தான் எங்களுக்கு சாப்பாடு என கூறினார். இதனை கேட்டதற்கு யோகி பாபு கண் கலங்கி விட்டார்.

அதன் பின்னர் யோகி பாபு பேசிய போது இன்று நான் ரூ 10 லட்சம் சம்பளம் வாங்குவதாக கூறுகிறார்கள்.

ஆனால் அது உண்மை இல்லை. புதுமுக இயக்குனர் ஒருவர் என்னிடம் கால்ஷீட் கேட்ட போது அவருக்கு கால்ஷீட் கொடுத்தேன், மேலும் அந்த தயாரிப்பாளரிடம் என்னுடைய சம்பளத்தை பாதியாக குறைத்து கொண்டேன் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.