Yennai Arinthaal Re-release Update

தல அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படம் மீண்டும் ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Yennai Arinthaal Re-release Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

ரசிகர்கள் அனைவரும் இந்த படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த பொங்கலுக்கு மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் திரைப்படங்கள் வெளியாவதால் விஜய் மற்றும் சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் அஜித் ரசிகர்களுக்கு வலிமை படத்தின் அப்டேட் கூட வெளியாகாத நிலையில் தற்போது ஒரு சூப்பரான தகவல் கிடைத்துள்ளது.

அதாவது கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் விஷால் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற என்னை அறிந்தால் திரைப்படம் ஜனவரி 8ஆம் தேதி முதல் தமிழகத்தில் குறிப்பிட்ட திரையரங்குகளில் மீண்டும் வெளியாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இது அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த தகவல் அதிர்ச்சியில் அஜித் ரசிகர்கள் எங்களுக்கும் இந்த பொங்கல் தல பொங்கல் தான் என தற்போதே கொண்டாடத் தொடங்கியுள்ளனர்.