Yatish Chandra transferred
Yatish Chandra transferred

Yatish Chandra transferred  – திருவனந்தபுரம்: ”சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு கேரள மாநிலம் முழுவதும் இன்று வரை பெரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக, இந்து அமைப்புகள் மற்றும் பாஜக, சபரிமலை பக்தர்கள், காங்கிரஸ் கட்சியினர் ஆகியோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்”.

இந்நிலையில் சபரிமலை மகரஜோதி சீசன் தொடங்கிவிட்டது. இதன் காரணமாக, பக்தர்கள் சபரிமலைக்கு வந்து செல்வதில் கடும் கட்டுப்பாடுகளும், விதிமுறைகளும் விதிக்கப்பட்டுள்ளன.

மேலும், பக்தர்களின் வருகை அதிகமாக இருப்பதனால், பாதுகாப்பு குறித்தும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ‘கடந்த வாரம் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இருமுடி கட்டி சபரிமலைக்கு சென்றிருந்த போது,

நிலக்கல் பகுதியில் அவருடன் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.பி யதிஷ் சந்திரா உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதை தொடர்ந்து கன்னியாகுமரியில் அவரது கட்சியினர் முழு அடைப்பு போராட்டம் நடத்தினர். இருப்பினும் கேரள முதல்வர் பினராயி விஜயன் உட்பட ஆளும்கட்சியினரின் அனைவரும் யதீஷ் சந்திர செய்தது சரிதான் என்று தெரிவித்தனர்.

இந்நிலையில், சபரிமலையில் நிலக்கல் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக, கேரள அரசு புதிய போலீஸ் குழுவை அமைத்தது.

அதன்படி உளவுத்துறை ஐ. ஜி அசோக் யாதவ் தலைமையில், புதிய போலீஸ் குழு நிலக்கல் பகுதி பாதுகாப்பிற்கு நியமிக்கப்பட்டுள்ளது.

மேலும், எஸ். பி யாதிஷ் சந்திராவை வேறு இடத்திற்கு பணிமாற்றம் செய்துள்ளனர்.