எது உண்மை நிலை தெரியாமல் இப்படி பண்ணலாமா என யாஷிகா ஆனந்த்தை வெச்சு செய்து வருகின்றனர்.

Yashika Anand Welcome Wishes to Shalini : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவர் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னர் படங்களில் நடிப்பதை முற்றிலுமாக நிறுத்திக் கொண்டார் ஷாலினி.

எது உண்மைனே தெரியாம இப்படியா?? யாஷிகா ஆனந்தை வச்சு செய்யும் ரசிகர்கள் - காரணம் அஜித் மனைவி ஷாலினி தான்.!!

இப்படியான நிலையில் ஷாலினி அஜித்குமார் என்ற பெயரில் டிவிட்டரில் புதிய அக்கவுண்ட் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ட்விட்டரில் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என பதிவு செய்ததை பார்த்த ரசிகர்கள் பலரும் ஷாலினி ட்விட்டருக்கு வந்துவிட்டதாக அவரை வரவேற்றனர்.

ஆனால் அது போலி கணக்கு, ஷாலினி டுவிட்டரில் இல்லை என அஜீத்தின் பிஆர்ஓ சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்தார். அப்படி இருக்கும் நிலையில் யாஷிகா ஆனந்த் வெல்கம் மேம் என அந்த போலி கணக்கை வரவேற்றுள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் அது போலி கணக்கு இது கூடவா தெரியாது என யாஷிகா ஆனந்த்தை திட்டி தீர்த்து வருகின்றனர்.

ரசிகர்கள் திட்டித் தீர்த்ததை தொடர்ந்து யாஷிகா ஆனந்த் இந்த பதிவை நீக்கியுள்ளார்.

எது உண்மைனே தெரியாம இப்படியா?? யாஷிகா ஆனந்தை வச்சு செய்யும் ரசிகர்கள் - காரணம் அஜித் மனைவி ஷாலினி தான்.!!