யாஷிகா ஆனந்த் கலந்து கொண்ட பேஷன் ஷோ நிகழ்ச்சிக்கு பாதுகாவலர்களாக பணியாற்றிய காவலர்கள் செய்த செயலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை யாஷிகா. இவர் முதலில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாஷிகா அனைத்து இளம் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தார். சிறிய இடைவேளைக்கு பிறகு மீண்டும் நடிக்க தொடங்கிய யாஷிகா தற்போது பிஸியாக பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

யாஷிகா ஆனந்த் கலந்து கொண்ட ஃபேஷன் ஷோ நிகழ்ச்சி - பணியில் இருந்த காவலர்களின் செயலால் ஏற்பட்ட பரபரப்பு.

இந்நிலையில் சென்னை மயிலாடுதுறையில் தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய ஃபேஷன் ஷோவில் யாஷிகா சிறப்பு விருந்தினராக சமீபத்தில் கலந்துகொண்டார். அங்கு ராம்ப் வாக் செய்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பலரும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ராம்ப் வாக் செய்தனர்.

யாஷிகா ஆனந்த் கலந்து கொண்ட ஃபேஷன் ஷோ நிகழ்ச்சி - பணியில் இருந்த காவலர்களின் செயலால் ஏற்பட்ட பரபரப்பு.

அப்பொழுது நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு அளிக்க வந்திருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளரும், நான்கு காவலர்களும் ராம்ப் வாக் செய்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் போலீஸ் சீருடையில் இந்த மாதிரி ராம்ப் வாக் செய்யலாமா? என சர்ச்சை கிளம்பியது. அதனை தொடர்ந்து மூன்று பெண் காவலர்கள், நான்கு ஆண் காவலர்கள் வெவ்வேறு பிரிவுகளில் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தற்போது வைரலாகி வருகிறது.