அரபிக் குத்து பாட்டுக்கு படு கவர்ச்சியாக குத்தாட்டம் போட்டு இணையத்தை சூடாக்கி உள்ளார் யாஷிகா ஆனந்த்.

Yashika Anand Dance to Arabic Kuthu : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக வரும் ஏப்ரல் மாதத்தில் பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்த படத்தில் இருந்து அரபிக் குத்து என்ற பாடல் லிரிக்ஸ் விடியோ வெளியானது.

இந்த பாடலுக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் நடனம் ஆடிய அந்த வீடியோவை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது நடிகை யாஷிகா ஆனந்த் படு கவர்ச்சியாக குத்தாட்டம் போட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. வீடியோவை பார்த்த ரசிகர்கள் இது அரபிக்குத்து இல்ல முரட்டு குத்து என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.