Yashika Aannand Banner
Yashika Aannand Banner
நடிகை யாஷிகா ஆனந்த் சென்ற கார் மோதியதில் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Yashika anand car met with ac accident – சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஹாரிங்டன் சாலையில் நேற்று நள்ளிரவு ஒரு கார் வேகமாக சென்று சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த ஒருவர் மீது வேகமாக மோதியது. உணவு டெலிவரி செய்யும் ஊழியரான அந்த வாலிபர் படுகாயமடைந்தார். கார் அருகிலிருந்த டீக்கடை மீதும் மோதியது.

கடல் பட நாயகி இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? – அதிர்ச்சியான ரசிகர்கள்

அதன்பின் அந்த வாலிபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காரில் பயணம் செய்தவர்கள் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. காரில் நடிகை யாஷிகா ஆனந்த் இருந்துள்ளார். இந்த விபத்து நடந்ததும், வேறு வாகனத்தில் ஏறி அவர் அங்கிருந்து சென்றுவிட்டார்.

யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டுக்குத்து உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர். பிக்பாஸ் சீசன் -வில் கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.