5 மாசத்துக்கு நடக்கவோ நிற்கவோ முடியாது என தன்னுடைய உடல் நிலை குறித்து அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் நடிகை யாஷிகா ஆனந்த்.

Yashika Anand About Health Status : தமிழ் சினிமாவின் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமானவர் யாஷிகா ஆனந்த். இந்தப் படத்தைத் தொடர்ந்து உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார்.

அதிவேகத்தால் வந்த விபரீதம்.. 5 மாசத்துக்கு நடக்க முடியாது.. உடல்நிலை குறித்து யாஷிகா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.!!

இவர் சமீபத்தில் மகாபலிபுரம் சென்று ஒரு ஹோட்டலில் மதிய உணவு அருந்தி விட்டு அதிவேகமாக பயணம் செய்தபோது ஏற்பட்ட விபத்தில் அவருடைய தோழி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதனையடுத்து யாஷிகா உட்பட அவருடைய இரண்டு நண்பர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் யாஷிகா ஆனந்த் தற்போது தன்னுடைய உடல் நிலை குறித்து உருக்கமாக பதிவு செய்துள்ளார். அதாவது 5 மாசத்துக்கு நடக்கவோ நிற்கவோ முடியாது. அனைத்தும் பெட்டிலே தான் நடக்கிறது. நல்லவேளை முகத்திற்கு எதுவும் ஆகவில்லை. இது கடவுள் எனக்கு கொடுத்த தண்டனை. ஆனால் நான் இழந்தவற்றோடு ஒப்பிடுகையில் இது எவ்வளவோ மேல் என்று கூறியுள்ளார்.

அதிவேகத்தால் வந்த விபரீதம்.. 5 மாசத்துக்கு நடக்க முடியாது.. உடல்நிலை குறித்து யாஷிகா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.!!