Maniratnam and Shankar
மணிரத்தினத்தை விட ஷங்கர் தான் பெஸ்ட்.. எனக்கு அவரை தான் பிடிக்கும் என பேசி பரபரப்பை கிளம்பியுள்ளார் யாஷ்.

KGF படத்தின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் யாஷ். கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான இவர் தற்போது KGF படத்தின் இரண்டாம் பக்கத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் சமீபத்தில் வெளியானது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாஷிடம் தொகுப்பாளர் சில கேள்விகளை கேட்டார்.

அதில் ஒன்று சங்கரா? மணிரத்தினமா? யாரை உங்களுக்கு பிடிக்கும் என கேட்டதற்கு டக்கென ஷங்கர் தான், அவர் தான் பிரம்மாண்ட படங்களை கொடுப்பார், எனக்கு பிரம்மாண்ட படங்களில் நடிப்பது தான் பிடிக்கும்.

மணிரத்தினம் சார் நல்ல படங்களை கொடுப்பவர் என பேசியுள்ளார். மேலும் குடியுரிமை சட்டம் குறித்து கேட்டதற்கு எல்லைகளை வைத்து நம்மை பிரித்து கொள்ள வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.