யாரடி நீ மோகினி சீரியல் நடிகைக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.
Yaradi Nee Mohini Nakshatra Marriage : தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற சீரியல் யாரடி நீ மோகினி. ஸ்ரீகுமார், சைத்ரா ரெட்டி, நட்சத்திரா உள்ளிட்டோ இந்த சீரியலில் இணைந்து நடித்திருந்தனர்.
இந்த சீரியலை தொடர்ந்து நட்சத்திரா கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் வள்ளி திருமணம் சீரியலில் நாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் திருமணம் குறித்து யாரடி நீ மோகினி சீரியல் நடித்து வந்த சீரியல் நடிகை பேசிய பேச்சுக்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன.
இந்த நிலையில் நட்சத்திராவிற்கு திட்டமிட்டபடி திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவருடைய திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.