ஹரி, அருண் விஜய் கூட்டணியில் வெளியான யானை திரைப்படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். இவர் முதல் முறையாக இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடித்த திரைப்படம் தான் யானை. மேலும் இந்த படத்தில் சமுத்திரகனி, போஸ் வெங்கட், சஞ்சீவ், ப்ரியா பவானி சங்கர், அம்மு அபிராமி என பலர் இணைந்து நடித்துள்ளனர்.

ஹரி, அருண் விஜய் கூட்டணி ஒர்க் அவுட் ஆனதா? இல்லையா? - யானை படத்தின் முழு விமர்சனம்

ஊருக்குள் மிகவும் கௌரவமான குடும்பமாக வாழ்ந்து வருகிறது அருண் விஜயின் பி ஆர் பி குடும்பம். இவருக்கு சமுத்திரகனி, போஸ் வெங்கட், சஞ்சீவ் என மூன்று அண்ணன்கள் உள்ளனர். மூவர் மீண்டும் அருண் விஜய் அன்பு அக்கறையும் வைத்திருந்தாலும் இவர்கள் அருண் விஜயை மாற்றான் தாய் வயித்து பிள்ளையாகவே பார்க்கின்றனர்.

அருண் விஜய் குடும்பத்தை பழிவாங்க ஜெயிலிலிருந்து வெளியே வருகிறார் வில்லன் ராமச்சந்திர ராஜு. பிரச்சனை இல்லாமல் சமூகமாக தீர்த்துக் கொள்ள அருண் விஜய் பல்வேறு முயற்சிகளை எடுக்க அனைத்தும் தோல்வியில் முடிந்து குடும்பம் பெரிய பிரச்சனையில் சிக்கிக் கொள்ள அண்ணன்களுக்கு அருண் விஜய் துரோகி என கூறி அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்புகின்றனர். இதனையடுத்து என்னவானது? இவர்கள் குடும்பம் ஒன்று சேர்ந்ததா? இல்லையா? என்பது தான் இந்த படத்தின் கதை.

ஹரி, அருண் விஜய் கூட்டணி ஒர்க் அவுட் ஆனதா? இல்லையா? - யானை படத்தின் முழு விமர்சனம்

படத்தை பற்றிய அலசல் : அருண் விஜய் ஆக்சன், எமோஷன், ரொமான்ஸ் என அனைத்திலும் பக்காவாக ஸ்கோர் செய்துள்ளார்.

அம்மு அபிராமி படத்துக்கு பலமாக இருக்க பிரியா பவானி சங்கர் கதையோடு ஒன்றி பயணிக்கிறார்.

சமுத்திரகனி அவருடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்த ராதிகாவும் முதிர்ச்சியுடன் எதார்த்தமான நடிப்பை கொடுத்துள்ளார்.

படத்திற்கு இசை மற்றும் ஒளிப்பதிவு பக்கபலமாக அமைந்துள்ளன. சில பாடல்கள் மட்டும் தவிர்த்து இருக்கலாம் என தோன்றுகிறது.

கதையை சரியாக தேர்வு செய்து திரை கதையில் சில இடங்களில் சலிப்பை ஏற்படுத்தி உள்ளார் ஹரி. மற்றபடி படத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் கதை நகர்கிறது.

யோகி பாபு காமெடிகள் பல இடங்களில் ஒர்க் அவுட் ஆகி இருந்தாலும் சில இடங்களில் இது தேவையா என சோதிக்கிறது.