அருண் விஜய்யின் அடுத்த படமான யானை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Yaanai Movie Release Date : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக சூர்யாவின் தயாரிப்பில் உருவாகியுள்ள ஓ மை காட் என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்த படம் வரும் ஏப்ரல் 21ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது.

இதில் அருண் விஜய்யின் மகன், அப்பா என மூன்று தலைமுறையினரும் இணைந்து நடித்துள்ளனர். மேலும் இது மட்டுமல்லாமல் அருண்விஜய் ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள யானை என்ற படத்தில் நடித்துள்ளார்.

தற்போது இந்த திரைப்படம் ஜூன் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யாவுக்காக அருவா என்ற பெயரில் எழுதப்பட்ட கதைதான் இந்த யானைக்கு என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.