Yaagam

✡ பிராமணர்கள் யாகம் செய்யும் போதும், பூஜை சடங்குகள் செய்யும் போதும், பூவையோ மஞ்சள் அட்சதையையோ கொடுத்து வலது தொடையின் மீது இரு கைகளையும் வைக்க சொல்லி வடமொழியில் சங்கல்பம் என்று ஒன்று செய்வார்கள். இது வட மொழியில் இருப்பதால் தற்கால மக்கள் பலருக்கும் அர்த்தம் தெரிவதில்லை.

✡ சங்கல்பம் ஏன்?
உலகில் எந்த ஒரு செயலும் குறிக்கோள் இன்றி செய்யப்படுவதில்லை. அதுபோல நாம் கடவுளிடம் வேண்டும் விஷயங்களும், யாகம் செய்வதும் ஒரு குறிக்கோளோடு தான். அந்த சமயத்தில் அர்ச்சனை அல்லது ஹோமம் செய்யக்கூடியவர்கள் தனது பெயர், ராசி, நட்சத்திரம், அன்றைய திதி, அன்றைய நட்சத்திரம், அந்த வாரம் அல்லது ஹோமம் செய்யக்கூடிய கிழமை, பக்ஷம் தமிழாண்டு போன்றவற்றை சொல்லி, என்ன நோக்கத்திற்காக , எதை வேண்டி அந்த யாகத்தை செய்கிறோம் என்பதையும் சொல்லி சங்கல்பம் செய்ய வேண்டும். இதுவே சாஸ்திரம் முறை.

✡ சங்கல்பம் செய்யாமல் அர்ச்சனை அல்லது ஹோமம் செய்தால் சரியான பலன் அல்லது அந்த ஹோமம் செய்வதன் நோக்கம் நிறைவேறாது. பூஜை, சங்கல்பம் என்பது இன்ன நாளில், இந்த இடத்தில், இன்ன நோக்கத்திற்காக இந்த பூஜையை செய்யப்போகிறேன் என்று அறிவிப்பதாகும். இப்படி பகிங்கரமாக உறுதிமொழி எடுப்பதால் அதிலேயே மனம் குவிந்திருக்கும். எடுத்த காரியம் விரைவில் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here